பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

0 310
Stalin trichy visit

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் – திருச்சி மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சியில் இருந்து செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது வழக்கம்.

அந்த வகையில் பொங்கல் திருநாளையொட்டி திருச்சியில் மூன்று தற்காலியாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் மற்றும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பயணிகள் மன்னார்புரம் பஸ் நிலையம் பகுதியில் இருந்தும்,இதே போல் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு சோனா மீனா திரையரங்க பகுதிகளும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

இதனை இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா மதுரை மாவட்டம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை கொடி அசைந்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தவர் காவல் ஆணையர் சத்யபிரியா :

திருச்சியில் பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இங்கிருந்து சிறப்பு பேருந்துகள் வரும் 17ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்தினார்கள் பயணிகளுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும் தற்பொழுது அதிக அளவு கூட்டம் இருப்பதால் மன பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக ஓட்ட வேண்டும் விபத்து இல்லாமல் பேருந்து இயக்க வேண்டும் இடையிடையே இடைவெளி எடுத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு பயணிகளை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினேன்.

பொங்கல் திருநாளை யொட்டி 1500 காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.