ஆணைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா

0 320
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆணைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா தலைமை ஆசிரியர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேளாண்மை அலுவலர் பிரியங்கா, உதவி வேளாண்மை அலுவலர் கணேசன், வேளாண்மை அலுவலக மேலாளர் சுகந்தா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதனை அடுத்து வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக இறுதி ஆண்டு மாணவிகள் ஆர்த்தி. ஆசியா, அபிநயா, அபிதா, அழகேஸ்வரி. அனீஷா ஆகியோர் மாணவர்களுக்கும், விவசாயப் பொதுமக்களுக்கும் கபாடி போட்டி, உறி அடித்தல் போட்டி, கோலப்போட்டி, ஓட்ட பந்தயம், தண்ணீர் நிரப்புதல் என பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பொங்கல் திருநாள் மற்றும் விவசாயத்தின் மேன்மை, தமிழர்களின் பண்டிகை கலாச்சாரம் பற்றியும் சிறப்பு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர்.பொங்கல் வைத்தும் போட்டிகள் நடத்தியும் விழா சிறப்புற கொண்டாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.