அரசு கல்லூரியில் 75வது சுதந்திர தினவிழா கருத்தரங்கம்

0 236
Stalin trichy visit

ஸ்ரீரங்கம்  நவலூர் குட்டப்பட்டுஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  நாட்டு நலப் பணித்திட்டம் மகளிர் மேம்பாட்டுத்துறை மற்றும் நுன்கலைப் பண்பாட்டுத்துறை இணைந்து நடத்திய 75வது சுதந்திர தின விழா கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ்குமார்
“பெண் அதிகாரம்” என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில் பெண் அதிகாரம் என்பது வெற்றுச் சொல்லாக வாக்கியமாக இல்லாமல் நடைமுறை வாழ்வியல், சமூகவியல், அரசியல், ஆட்சிமுறைகளில் , அதிகாரப் பரவலாக்கமுறைகளில் நடைமுறைக்கு கொண்டுவருவதே கல்வியின் நோக்கமாக வேண்டும். ஆதி தொல்குடி சமூகம் தொடங்கி இன்றுவரை உயிரினங்களில் தலைமை தாங்குவது, வழிகாட்டுவது, பாதுகாப்பது பெண்ணினம்தான். மழைக் காடுகளையும் சோலைக்காடுகளையும் யானை பாதுகாப்பதுபோல புவிப் பந்தின் மானுட சமூகத்தைப் பேணிக்காப்பவள் பெண். அதிகாரம் என்பது ஆட்சி செலுத்துவது அல்ல, அரவணைப்பது, அன்பு செலுத்துவது , பாலினப் பாகுபாடின்றி பாதுகாப்பது அவையாவுமே பெண்மையின் அதிகாரமாய் பல்வேறு பரிமாணங்களில் விரிகிறது. மண்ணைப் பாதுகாத்து உயிர்ப்பித்து காலத்தை ஆளும் மையமே பெண்.என்றார்.

முனைவர் S.செந்தில்வேல் வரவேற்புரையாற்றினார்.  கல்லூரி முதல்வர் J.லலிதா தலைமை வகித்தார்.    நிறைவாக ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ஜா. ஸ்டாலின் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.