குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம்| மண்ணச்சநல்லூர் வட்டம், மாதவா பெருமாள் கோயில் ஊராட்சி, நொச்சியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு ,சுற்றுச்சூழல், குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஜோஸ்பின் தலைமையில் 20.01.2023 நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு,
சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், மண்ணச்சநல்லூர் கிராம மேம்பாட்டு மைய இயக்குனர் ராஜு ஆகியோர் போதை பொருளினால் குழந்தைகளுக்கு உடல் அளவில் மன அளவில் ஏற்படும் பிரச்சனைகள், ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்,திடக்கழிவு மேலாண்மை மற்றும் குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் குழந்தை நலன் சார்ந்த சட்டங்கள் குறித்து பேசினார்கள். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.