எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் சார்பில் கிராமிய மதிப்பீடு முகாம்
வெங்கங்குடியில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமிய மதிப்பீடு முகாம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ராஜசேகர் முன்னிலையில் கிராமிய மதிப்பீடு முகாம் நடத்தினர். இதில் வெங்கங்குடி கிராமத்தின் சமூக வரைபடம், பருவகால பயிர்களின் வரைபடம், நீர் பாசனம் வாய்க்கால் வரைபடம் மற்றும் நகர் ஆற்றல் வரைபடம் ஆகியவற்றை வரைந்து கிராம மக்கள் மத்தியில் கலந்துரையாடினார்கள்
இந்நிகழ்வில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் சஞ்சய் , சர்வேஸ்வர்,. செந்தில் குமார், சண்முகம்,சிவா, சிவபாலன் ,ஸ்ரீலோகேஷ் ,ஸ்டாலின் விவசாயிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.