கிணற்றில் தவறி விழுந்த காளை மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

0 233
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த காளை மாடு.சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். மகிழம்பாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மகன் ஜான். இவர்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் காளைமாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இது குறித்து ஜான் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி, சிறப்பு நிலைய போக்குவரத்து ரவிக்குமார் வீரர்கள் சதீஷ்குமார், செல்வகுமார், ராஜேந்திரன்,சபாபதி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் காளை மாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் தீயணைப்பு வீரர்கள் காளை மாட்டை ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.