உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கியது

0 304
Stalin trichy visit

மாகாளிகுடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கியது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள மாகாளிகுடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் வருகின்ற 27 ந்தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கியது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபக்கோவிலான அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவில் மாகாளிகுடி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருகின்ற 27 ம் தேதி
வெள்ளிக்கிழமை காலை 8-00 மணிக்கு மேல் 9 – 30 மணிக்குள் நடைபெற இருக்கின்ற மஹா கும்பாபிஷேக விழாவிற்காக இன்று காலை 10 – 30 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் ஊர் கிராம பொதுமக்கள் அனைவரும் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.