தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து : இளைஞர் உயிரிழப்பு

0 272
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலை மேம்பாலம் தடுப்புச் சுவரில் மோட்டார் பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் 20 வயதான பூமி பாலன், கலியபெருமாள் மகன் 24 வயதான பாஸ்கர் மற்றும் குமார் மகன் 20 வயதான குணா இவர்கள் மூன்று பேரும் மோட்டார் பைக்கில் அரியலூரிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் புறவழிச்சாலை மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குணா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகுன்றனர்.இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.