அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு

0 302
Stalin trichy visit

மொழிப்போர் தியாகிகள் தினம் – தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

ஹிந்தி முறையை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் ஆன கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடம் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து அதிமுகவினர் ஊர்வலமாக சென்று
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.

இதில், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, வளர்மதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குமார், ரத்தினவேல் அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் J.சீனிவாசன், மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.