கருமண்டபம் JRS நகர் பகுதியில் குடியரசு தினவிழா

0 384
Stalin trichy visit

“கருமண்டபம் JRS நகர் பகுதியில் குடியரசு தினவிழா”

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் நலச்சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று 26-01-2023 இந்திய திருநாட்டின் 74ஆவது குடியரசு தினவிழா வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர், ஜே.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக, நலச்சங்கத் துணைத்தலைவர் திரு.கிருஷ்ணசாமி தலைமையில், நலச்சங்கச் பொருளாளர் திரு. சகாயராஜா அவர்கள் வரவேற்பு நல்கிட, செயலாளர் திரு.அக்பர் ஹூசைன், நலச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

தொழிலாளர் துறையில் பணி ஓய்வு பெற்ற ஜெகதீசன் தேசியக்கொடி பறக்கவிட்டு சிறப்புரையாற்றினார். 55ஆவது மாமன்ற உறுப்பினர் திரு.ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சங்க துணை செயலாளர் திரு.தட்சிணாமூர்த்தி, ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு.ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் குடியரசு சிறப்பு குறித்து விளக்கி பேசினார்கள். இவ்விழாவில் சங்க நிர்வாகிகளும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பேராசிரியர் ராமர் பங்களிப்புடன், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான சிற்றுண்டி இனிப்புடன் வழங்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.