போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி

0 318
Stalin trichy visit

திருச்சி, பிப்.13 திருச்சி பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில் போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பயிற்சியாளர்களுக்கான வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து, போக்குவரத்து காவல்துறையினரின் போக்குவரத்து விதிகள் தொடர்பான செயல்விளக்கம் செய்வதை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா, உதவி ஆணையர் போக்குவரத்துக் காவல் (மாநகரம்) ஜோசப்நிக்சன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மோகன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ், கண்ணன், காவல்துறையினர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.