காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

0 396
Stalin trichy visit

திருச்சி கருமண்டம் அசோக்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன். கதிர்(20). இவர் மரவேலை செய்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய பெரியம்மா மகன்களான ரஞ்சித்(23), பிரவின்குமார்(19) ஆகியோருடன் சேர்ந்துகொண்டு விடுமுறை தினம் என்பதால் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றனர். அப்போது காவிரி ஆற்றில் குளிப்பதற்காக காவிரியின் 3வது மதகின் பகுதியில் உள்ள பகுதியில் குளிக்க சென்றனர்.

அப்போது காவிரியில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதியில் கதிர் நீச்சல் தெரியாத்தால் தண்ணீரில் மூழ்கினார். அப்போது அவருடன் குளித்தவர்கள் காப்பாற்ற முயன்று முடியாத நிலையில் சத்தம் போட்டுள்ளனர். காவிரி ஆற்றில் சத்தம் கேட்கவே அருகில் இருந்தவர்கள் ஓடிசென்று தண்ணீரில் மூழ்கியவரை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கியவரை இறந்த நிலையில் மீட்டனர். இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பிரசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.