ஓய்வு பெற்ற தொழிலாளர்-பென்சனர் நலச்சங்க மண்டல பேரவை கூட்டம்

0 414
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் நலச்சங்க திருச்சி மண்டல பேரவை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராசு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருச்சி ஆசிரியர் ஆஷாதேவி மற்றும் 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியதாரர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு, மருத்துவ திட்டம், வாரிசு வேலை வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பச்சையப்பன் நன்றிகூறினார்.

Leave A Reply

Your email address will not be published.