தி.மு.க. தலைவர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 150 பேருக்கு 1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : மணச்சநல்லூர் எம்.எல்.ஏ.கதிரவன் வழங்கல்

0 327
Stalin trichy visit

வாழ்வாதாரம் பாதித்த ஏழை,எளியோருக்கு அரிசி,மளிகை பொருட்களை150 பேருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ கதிரவன் வழங்கினார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி ஏழை,எளிய மக்கள் 150 பேருக்கு ரூ.1000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவன் தனது சொந்த செலவில் இன்று வழங்கினார். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மண்ணச்சநல்லூர் பகுதி ஏழை எளிய, மக்கள் 150 பேருக்கு அரிசி,பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட ரூ. 1000 மதிப்புள்ள மளிகை பொருட்களை 150 பேருக்கு மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் தனது சொந்த செலவில் வழங்கினார்.நிகழ்வில் திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.