முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா : தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை

0 1,024
Stalin trichy visit

திருச்சி, பிப். 22 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 75-வது பிறந்தநாளையொட்டி வரும் 24 ஆம் தேதி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவி அம்மா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அனைத்து இடங்களிலும் அம்மாவின் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகுந்த சிறப்புடன் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.