அரசு மணல் குவாரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, பிப். 22 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன், நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி இயக்கநர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை பாலமுருகன், வட்டாடசியர்கள் சக்திவேல் முருகன், சிசிலினா சுகந்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் உடனிருந்தனர்.