காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு திட்டம் நிறைவு விழா

0 333
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கிட சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு திட்டத்தினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் 24.11.2022 அன்று துவக்கிவைத்து பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையடுத்து 90 நாட்கள் தொடர்ந்து நெகிழி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக நெகிழி ஒழிப்பு தொடர்பாக வணிக நிறுவனங்களுக்கு மாற்று பொருட்களான மஞ்சள் பைகள், சில்வர் பாத்திரங்கள் வழங்குதல், நேரடியாக ஆய்வு மேற்கொண்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்கள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து அபராதம் விதித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்துதல், அனைவருக்கும் மஞ்சல் பையினை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைப்பெற்றது.
நெகிழி ஒழிப்பு திட்டத்தின் 90வது நாள் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் மஞ்சள் பையினை வழங்கி நெகிழியினை தவிர்ப்பதனை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது,
பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத்தலைவர் சுதா சிவசெல்வராஜ், இளநிலை உதவியாளர் இராஜேந்திரன்,
பதிவரை எழுத்தர் மாணிக்கவள்ளி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.