முதலமைச்சர் பிறந்த நாள் விழா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, பிப்.28 திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையி, மார்ச் 1 (நாளை) கழகத் தலைவரும், -தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், மரம் நடுதல், இரத்தம் தானம் செய்தல், கழகக் கொடி ஏற்றுதல் என பொது மக்களுக்கு பயன்படும் வகையில் மாதம் முழுவதும் எழுச்சியாக கொண்டாவோம். மேலும் மாவட்ட கழகத்தின் சார்பாக அனுப்பட்டுள்ள பிரதிநிதிகள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏதுவாக அவர்களின் வருகையை உறுதி செய்யும் வகையில் பகுதி ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட மாநகர நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டு கொள்கின்றேன்.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.