பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, பிப். 27 திருச்சி கலையரங்கத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் வகையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் வர்த்தக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனைப்பிரிவு முறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் செயல் இயக்குநர் பெல் திருச்சிராப்பள்ளி எஸ்.வி.ஸ்ரீனிவாசன், இயக்குநர் திருச்சிப்பள்ளி விமான நிலையம் சுப்ரமணி, இந்திய சிறு தொழில் சங்கங்களின் தென் இந்திய கூட்டமைப்புத் தலைவர் கார்த்திக்கேயன், திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கங்களின் தலைவர் முகில் பி.ராஜப்பா, இணை இயக்குநர் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அலுவலகம் (சென்னை) இணை இயக்குநர் சுரேஷ்பாபு, துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்ட ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள், வங்கித்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள், வருங்காத் தொழில் முனைவோர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.