நான் முதல்வன் திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வித்துறை நாட்டு நல பணித்திட்டம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி நோக்கி பள்ளி மாணவ,மாணவிகள் களப்பயணம்.
தமிழ்நாட்டு இளைஞர்களை கல்வியில், அறிவில், ஆற்றலில் தனித் திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமில்லாது வாழ்க்கையில் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கின்ற புதிய திட்டத்தை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வர் திட்டத்தில் கல்லூரி நோக்கி பள்ளி மாணவ,மாணவிகள் களப்பயணம். கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த
கல்லூரிக்கு கீழ அன்பில் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி, அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளி, லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பூவாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி என ஐந்து பள்ளிகளில் இருந்து 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,
மாணவிகள் தலா 10 பேர் வீதம் 50 பேர் மற்றும் ஆசிரியர்கள் டயட் செல்வக்குமார் புள்ளம்பாடி ரமேஷ் ஆகியோர் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்த கல்லூரிக்கு வருகை புரிந்தனர் இதில் அனைத்து துறை தலைவர்கள் துணையுடன் மாணவர்களின் ஒத்துழைப்புடன் பள்ளி மாணவ,மாணவிகளை 10 துறைகளுக்கும் அழைத்துச் சென்று துறையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தனர்.
பின்னர் கல்லூரி முதல்வர் பேசியபோது
இந்த கல்லூரியில் 10 துறைகள் உள்ளது அதில் மிக சிறந்த பேராசிரியர்கள் உள்ளனர். பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் நமது கல்லூரியில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வந்துள்ள மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு படித்தவர்கள் பல பேர் நல்ல அரசு வேலைகளுக்கு சென்றுள்ளார்கள். நம் மாணவர்களுக்கு நல்ல விளையாட்டு, யோகா, கலை பண்பாடு, YRC, RRC, புதுமைப் பெண் திட்ட உதவிகளை செய்து கொடுக்கிறோம். இங்கு சேர்ந்தால் நன்று அப்படி சேராமல் இருந்தாலும் மற்ற தொழில்கல்வியில் IIT, IIM , NIT போன்ற கல்விநிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலை கழகத்தில் சேர்த்து பயன்பெறுவதற்கான வாய்ப்பு பற்றிப் பேசினார்.
இறுதியில் கல்லூரி கலைப் பண்பாடு சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வழிகாட்டுதலுடன் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் எம். சக்திவேல் செய்திருந்தார்.