பள்ளி மாணவிக்கு நல்லாட்சியின் கவிச்சூரியன் விருது

0 309
Stalin trichy visit

கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்தியாலயா பள்ளி மாணவி கவிதை,பட்டிமன்றம் பேச்சு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிக்கு நல்லாட்சியின் கவிச்சூரியன்  விருது வழங்கப்பட்டது .

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி யாழினி இணையதளம் வழியாக நடைபெற்ற கவிதை,பட்டிமன்றம்,பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பல்வேறு சான்றிதழ்களை பெற்றுள்ளார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான நல்லாட்சியின் சூரியன் விருதான கவிச்சூரியன் விருது மாணவி யாழினிக்கு வழங்கினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பசுமை வாசல் பவுண்டேஷன், ஸ்ரீ சக்ஸஸ் அகாடமி & பவுண்டேஷன் மற்றும் ருப்ஷிகா பாரம்பரிய கலை விளையாட்டு மற்றும் கலாச்சார கூட்டமைப்பு சார்பில் சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான நல்லாட்சி சூரியன் விருது வழங்கும் நிகழ்வு அறிவித்தனர்..இதற்காக பலவேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான நல்லாட்சியின் சூரியன் விருதிற்கு சமர்பித்தனர். இதில் பங்கேற்ற ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி யாழினி கவிதை போட்டியில் பங்கேற்ற சான்றிதழை சமர்பித்தார். இதில் மாணவி யாழினிக்கு சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான நல்லாட்சியின் சரியான விருதான கவிச்சூரியன் விருதை வழங்கினார்.

சூரியனின் 2023-ம் ஆண்டுக்கான நல்லாட்சியின் சூரியன் விருதான கவிச்சூரியன் விருதை
பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.