திருச்சி எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விடுதி நாள் விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ்.ஆர்.எம் கல்லூரியில் 2023 ம் ஆண்டிற்கான விடுதி மாணவர்களுக்கு ஹோம் அவே விடுதி நாள் விழா நடைபெற்றது.
2023 ம் ஆண்டு விடுதி மாணவர்களுக்கான ஹோம் அவே விடுதிநாள் விழா எஸ் ஆர் எம் கல்லூரி திருச்சி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவினை எஸ்ஆர்எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத் தலைவர் டாக்டர் ஆர் சிவகுமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவம்,பொறியியல்,நர்சிங்,கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவ,மாணவிகளின் கலை மற்று நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விஜய் டிவியின் புகழ் பெற்ற தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் மற்றும் வி.ஜே. கல்யாணி ஆகியோர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவில் எஸ்ஆர்எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாக முதன்மை இயக்குனர் டாக்டர் சேதுராமன், திருச்சி எஸ் ஆர் எம் வளாக இயக்குனர் டாக்டர் மால்முருகன் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் மாற்று வீடான விடுதியில் சோர்வினை போக்கி உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.