மாநகராட்சி கூட்டத்தில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி பேசிய மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 456
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாமன்றம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.  மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் போற்றும்   தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி  தமிழ்நாடு முதலமைச்சர்  வழியில் நாம் மக்கள் பணி ஆற்றிடுவோம் என்று சொல்லி, மேலும் மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவுற்றது தொடர்ந்து தனக்கு வாய்ப்பு வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தனது வார்டு மக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து,
முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது போல் ஒரு ஆட்சி சிறப்பானதொரு ஆட்சியாக இருக்கிறது என்று சொன்னால் அதற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அரசு அதிகாரிகள்தான் எனவே அரசு அதிகாரிகள் உடன் நாம் இணக்கமாக இருக்க வேண்டும் என்றுரைத்துள்ளார், அதேபோல்  தமிழ்நாடு முதலமைச்சர்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் நடந்த கூட்டத்தில் பேசும் போது மக்கள் பிரதிநிதிகள் உடல் என்றால் அரசு அதிகாரிகள் உயிர் போன்றவர்கள், எனவே அவர்களுடன் இணக்கமாக நாம் இணைந்து மக்கள் பணியாற்றும் போது தான் சிறப்பானதொரு வளர்ச்சி ஏற்படும் என்றுரைத்துள்ளார்,ஆகவே அந்த வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆணையர் தலைமையின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! நன்றி!

மேலும் கடந்த கூட்டத்தில் பேசும் போது ஜோதி புரம்,ஸ்ரீராம் நகர்,குறிஞ்சி நகர், நேதாஜி சாலை, குறிஞ்சி நகர் விஸ்தரிப்பு அண்ணா தெரு, காந்தி தெருவில் தண்ணீர் சரியாக வருவதில்லை என்பதை எடுத்துரைத்தேன் அதற்கேற்ப மாநகராட்சி ஆணையர் துரித நடவடிக்கை எடுத்து தண்ணீர் வரவைத்தற்கு எனது வார்டு மக்கள் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிநின்று நன்றி தெரிவித்து கொள்கிறேன், மாமன்ற கொறடா மற்றும் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை நிரப்பிட வேண்டுகிறேன் என்று பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.