ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 349
Stalin trichy visit

திருச்சி, பிப். 28 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஓன்றியம் நம்பர் ஒன் டோல்கேட் கடைவீதியில் காரல் மார்க்ஸ் குறித்து விமர்சனம் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் ஏகலைவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மணப்பாறை நகர செயலாளர் ஜனசக்தி உசேன் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் மருதை, துறையூர் ஒன்றிய செயலாளர் சேகர், லால்குடி ஒன்றிய செயலாளர் மார்ட்டின், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உட்பட திருச்சி புறநகர் மாவட்ட. இடை கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.