முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாள்

0 285
Stalin trichy visit

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் ஒருங்கிணைந்த மேனாள் அமைச்சரும்  திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 30ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் தர்மலிங்கத்தின் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு   தலைமையில்,  பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், அரங்கநாதன், சபியுல்லா, கோவிந்தராஜன், குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், விஜயகுமார், ராஜ், முஹம்மது, மணிவேல், சிவக்குமார் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.