உழவன் செயலி குறித்து வேளாண் கல்லூரி மாணவி விளக்கம்

0 321
Stalin trichy visit

 

எம். ஆர். பாளையம், நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராமத்தில் தங்கிப் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குப் பல தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்துவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இணைப்பேராசிரியரான முனைவர் பா. குணா வேளாண் விரிவாக்கத் துறை, நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, திருச்சி – 621104, இன் வழிகாட்டுதலின் படி, மாணவி சை.சையதம்மாள், விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து விளக்கினார்.

விவசாயத் துறையால் உருவாக்கப்பட்ட உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு அனைத்து திட்டக் கூறுகள் மற்றும் மானிய உதவி முறைகள் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்க விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு மற்றும் அதன் நிலை, விதை மற்றும் உரம் கிடைக்கும் தன்மை, பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பது, சந்தை போன்ற தகவல்களைப் பெற உதவுகிறது.

அனைத்து திட்ட கூறுகள் மற்றும் மானிய உதவி முறைகள் பற்றிய தகவல்களைப் பெற விவசாயிகளுக்கு வழங்கும் இந்த மொபைல் செயலியில் இருந்து விவசாயிகள் முழுமையான தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் பெறலாம்.

முன்னுரிமை அடிப்படையில் திட்டத்தின் பலன்களைப் பெற தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும், இந்திய நாட்டிலேயே முதன்முறையாக, விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், பயிர்க் காப்பீட்டின் கீழ் இழப்பீட்டுத் தொகையைப் பெறும் வரை விண்ணப்பத்தின் நிலை, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள அரசு, தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விதை மற்றும் உரம் கிடைப்பது பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்:
1. உயிர் உரங்களை ஊக்குவித்தல்
2. மண்ணின் தரத்தைப் பேணுதல்.
3. உயிர் உரங்கள் விநியோகம்

Leave A Reply

Your email address will not be published.