திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

0 1,178
Stalin trichy visit

திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (72). இவருடைய மகள் ஆர்த்தி வேலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ஆர்த்தியின் கணவர் ஆனந்த மூர்த்தி சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

மகள் ஆர்த்தி மற்றும் மருமகன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னை தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான கலைமணி வீட்டில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன், ஆர்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.