வாய்க்காலில் பைக்குடன் தவறி விழுந்த இளைஞர் பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வந்தலைக் கூடலூரில் இன்னிசைக் கச்சேரி பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளைஞர் மோட்டார் பைக்குடன் புள்ளம்பாடி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
புள்ளம்பாடி அருகே வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்தவர் திவாகரன். இவர் ஐடிஐ முடித்துவிட்டு வெல்டிங் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று காணக்கிளியநல்லூரில் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது இந்த விழாவை முன்னிட்டு இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரி பார்ப்பதற்ப்காக வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த திவாகரன் தனது பைக்கில் சென்றுள்ளார். இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தலை கூடலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக புள்ளம்பாடி வாய்க்காலில் மோட்டார் பைக்குடன் தவறி விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.