ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்
முசிறி கைகாட்டியில் ஜாக்டோ ஜியோ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பணிபாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சரண்டர் மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் பாலகிருஷ்ணன் வட்டார செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் முதுநிலை ஆசிரியர் சிவராஜ், வட்டாரச் செயலாளர்கள் குமாரலிங்கம், சிவக்குமார், சந்திரசேகர், மகளிர் அணி மாநில தலைவி சத்தியவாணி, பட்டதாரி ஆசிரியர் சங்கம் சரவணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினர். பின்னர் மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியில் வட்டார செயலாளர் ஞானமுத்து நன்றி கூறினார்