திருச்சி அரசு மருத்துவமனையில் மின்விசிறிகள் பழுதால் நோயாளிகள் கடும் அவதி
திருச்சி அரசு மருத்துவமனையின் நான்காவது தளத்தில் Department of DVL என்ற அறையில் கை , கால் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு 15 நோயாளிகளுக்கு மேல் அந்த அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த அறையில் மொத்தம் 9 மின்விசிறிகள் உள்ளது.ஆனால் அதில் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக மற்ற மின்விசிறி எதுவுமே செயல்படவில்லை. அங்கு வரும் மருத்துவரிடம் இதை பற்றி அங்குள்ள நோயாளி ஒருவர் கூறியதற்கு உனக்கு வேண்டுமென்றால் வீட்டிலிருந்து மின்விசிறி எடுத்துட்டு வந்து போட்டுக்கோ என்றும்….மற்றவர்கள் எல்லாம் இருக்கும்போது உனக்கென்னா என்று ஒருமையில் பேசியும் இருக்க முடியவில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு போய் பாத்துக்கோ என்றும் கூறியுள்ளார்.
இங்கு மருத்துவம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களே வருகிறார்கள்.இந்நிலையில் அந்த மருத்துவர் இப்படி கூறியது மிகவும் கண்டிக்கதக்க செயலாகும்.
இந்த புகாரை அந்த மருத்துவமனையின் உயர் பதவியில் உள்ள (RM) அதிகாரியின் கவனத்திற்கும் இந்து முன்னணியினர் எடுத்துச்சென்றனர்.அவர்கள் இதனை உடனே சரி செய்து தருகிறோம் என்று கூறினார்கள்.ஆனால் அவர்கள் சொல்லி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இதுவரை எந்த மின்விசிறியும் சரி செய்யபடவில்லை.
தற்போது நிலவும் வெப்பம் நிறைந்த சூழ்நிலையில் நன்றாக உள்ள நம்மலாலேயே வீட்டில் மின்விசிறி இல்லாமல் இருப்பது மிகவும் கடினமாக உள்ளது.
மருத்துவமனையில் அந்த தளத்தில் உள்ள நோயாளிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அடிபட்டு வந்துள்ளவர்கள் அவர்களால் அந்த எரிச்சலை எப்படி இந்நிலையில் தாங்கி கொள்ள முடியும்…
எனவே அந்த அனைத்து மின்விசிறியையும் உடனடியாக சரி செய்ய வேண்டுமென்று அங்குள்ள நோயாளி சார்பிலும் இந்து முன்னணி சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்று அரசு மருத்துவமனையில் பல பிரச்சனைகள் உள்ளது. லஞ்சம் வாங்குபவர்களின் கூடாரமாகவும் அரசு மருத்துவமனை செயல்படுகிறது.இதனை நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.