கணவனை காணவில்லை : மனைவி புகார்

0 546
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மங்கப்பட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் ராம்ராஜ் மணிமேகலை இவர்களுது மகன் நடராஜ் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு
அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு பகுதியில்
மின்சார வாரியத்தில் கேங்மேனாக தற்காலிக பணியாற்றி வந்தார் அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் கொழஞ்சியம்மாள் மகள் ரம்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்யா பட்டதாரி பெண்ணாவார் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும்
காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே மங்கப்பட்டி புதூரில் வசித்தனர் இந்த நிலையில் கடந்த 17 .3. 2023 அன்று முதல் தனது கணவன் நடராஜ் காணவில்லை என ரம்யா உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் காதல் திருமணம் செய்த கணவர் காணவில்லை என காவல்துறையில் பெண் அளித்த புகார் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.