வீட்டிற்குள் புகுந்த 5 1/2 நீளமுள்ள நல்ல பாம்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 5 1/2 அடி நீளமுள்ள நல்ல பாம்பு. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டனர்.
கல்லக்குடி மால்வாய் ரோட்டில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் வீட்டில் நேற்று இரவு 5 1/2 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறி வெளியே ஓடிவந்தனர். இது குறித்து பார்த்திபன் புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பாரதி தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் சிறப்பு நிலைய போக்குவரத்து அமுதகுமார் வீரர்கள் ரமேஷ் குமார், மோகன் உள்ளிட்டோர் சம்பவ இத்திற்க்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.