குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது 2 பேர் கைது

0 287
Stalin trichy visit

மது வாங்கி தருவதாக ஏமாற்றிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபரை கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த 07.02.23-ந்தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெளிமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டு இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், விசாரணை செய்தும் மேற்படி மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபரை கொலை செய்த சரித்திர பதிவேடு ரவடியான பாலமுருகன் @ வெந்தகை பாலா, வயது 35, த.பெ.சுப்ரமணி, கணேஷ் வயது 38, த.பெ.சோமசுந்தரம் மற்றும் ஒரு பெண் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிரிகள் பாலமுருகன் @ வெந்தகை பாலா என்பவர் மீது கொள்ளையில் ஈடுபட்டடதாக 5 வழக்குகளும், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடியதாக 3 வழக்குகளும், இரவு நேர பாதுகாவலரை கொலை செய்ததாக ஒரு வழக்கும், பெண்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஒரு வழக்கு உட்பட 17 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும் எதிரி கணேஷ் என்பவர் மீது வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

மேற்படி எதிரிகள் பாலமுருகன் @ வெந்தகை பாலா மற்றும் கணேஷ் ஆகியோர் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்றங்கள் செய்து பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் எண்ணம் கொண்டவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர்  M.சத்தியப்பிரியா,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.