சுங்கக் கட்டண கொள்ளையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

0 332
Stalin trichy visit

சமயபுரம் சுங்கச்சாவடியில் மத்திய அரசை கண்டித்து கூட்டமைப்பு சங்கங்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..

இந்தியாவில் இன்று முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே சுங்கச்சாவடிகள் அதிகளவு கட்டண வசூலிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள சுங்க கட்டண உயர்வு மத்திய அரசு அறிவித்திருப்பது என்பது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என வலியுறுத்தி தமிழக முழுவதும் சுங்கச்சாவடி முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக சமயபுரம் சுங்கச்சாவடியில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து
அநியாய சுங்கக் கட்டண கொள்ளையை திரும்ப பெறு!

தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்று! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

.இந்த ஆர்ப்பாட்டத்தில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் கண்டன உரையாற்றினார் ..
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சபரிநாதன், மண்டல செயலாளர் முரளி கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.