திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் காவல் உதவி மையம்
ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லை திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் GVN Riverside Hospital ன் பங்களிப்பில் ரூ5,00,000/- மதிப்பீட்டில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு நேற்று (மார்ச்31) மாலை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு, காவல் துணை ஆணையர் தெற்கு,காவல் உதவி ஆணையர்,ஸ்ரீரங்கம் காவல் சரகம்,காவல் ஆய்வாளர்,ஸ்ரீரங்கம் காவல்நிலையம் மற்றும் GVN Riverside Hospital ன் நிர்வாக அதிகாரி மருத்துவர் V.J.செந்தில்குமார் , சக்தியாதவ்,CEO மற்றும் GVN Riverside Hospital மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேற்படி காவல் உதவி மையம் அமைக்கப்பட்டதன் மூலம் சென்னை பைபாஸ் பகுதியில் சாலை போக்குவரத்து நெரிசல் மேலாண்மை ,விபத்து தடுப்பு மற்றும் குற்ற தடுப்பு ஆகியவை சிறப்பாக மேற்கொள்ளப்படும். மேலும் அந்த பகுதியில் விபத்து தடுப்பு மற்றும் குற்ற தடுப்பு பணிகளுக்காக காவல் உதவி மையம் எதிரே உயர் தொழில்நுட்பம் கொண்ட 5 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் கே.கே.சாலை முதல் ‘Y’ரோடு சந்திப்பு வரை மொத்தம் 10 CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குற்ற தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.