சோளத்தட்டை கழிவுகளில் தீ விபத்து

0 335
Stalin trichy visit

 

திருச்சி, ஏப்.1 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி தாப்பாய் சாலையில் குடியிருப்பு வீடுகளுக்கு அருகில் இருந்த சோளக்காடு கழிவுகள் தீப்பற்றி எரிந்தது் புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

கல்லக்குடி தாப்பாய் சாலையில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் சோளக்காடு கழிவுகள் வைக்கப்பட்டுள்ளது.இந்த சோளக்காடு கழிவுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற புள்ளம்பாடி தீயணைப்பு பொறுப்பு நிலைய அலுவலர் பாரதி தலைமையில் வீரர்கள் திராவிடன், அருண்ராஜ், பிரகாஷ், நவீன், தண்டாயுதபாணி ஆகியோர் சுமார் அரை மணி நேரத்திற்க்கு மேல் போராடி குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் விரைந்து தீயை அணைத்த புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நன்றியை தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.