கணவன் தற்கொலையை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவியும் தற்கொலை

0 291
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் சத்தியகிரி (28). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அனிதா (19) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்தியகிரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் அவரை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அனிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.