இந்தியா மற்றும் சுவீடன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்வு..!
திருச்சி.ஏப்ரல்.04, சுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாமாமியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி 11 நாட்கள் மாக Youlli Enienational அமைப்பின் மூலம் இந்தியா சுவீடன் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு இந்திய நாட்டிற்கு வந்தது. இக்குழுவை திரு.சந்தானம் மற்றும் சங்கரி ஆகியோர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

இந்தியா சுவீடன் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு இந்தியா பயணத்தின் ஒரு பகுதியாக இன்று 03.04.23 தேதி மாலை 06.00 மணியளவில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இந்தியா சுவீடன் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியானது, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M. சத்தியப்பிரியா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் Tr.Frendrick Lund, Tmt.Karin Ohison மற்றும் 11 சுவீடன் நாட்டு 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டார்கள், மேற்கண்ட நிகழ்ச்சியை Yoon Exnora International அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. மோகன் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் சுவீடன் நாட்டு பள்ளி மாணவியரிடம் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள், குறிப்பாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, மேலும் தமிழக காவல்துறையில் பெண்களின் பங்கு இந்தியாவின் கல்வி கலாச்சாரம் பெருமை குறித்து சுவிடன் மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தார்கள். மேலும், தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள், முக்கியத்துவம், சமூகத்தில் பொறுப்பு குறித்து விளக்கி கூறினார்கள், மேலும் காவல் துறையினரின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியா நிகழ்வில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பணியாற்றிய போது எற்பட்ட அனுபவத்தை அவர்களுடம் பகிர்ந்து கொண்டும். நிகழ்ச்சி குறித்து குறும்படத்தை காட்டி தமிழகத்தின் பெருமையை எடுத்துரைத்தார்கள். சுவீடன் நாட்டிலிருந்து இந்தியா வந்து கல்வி மற்றும் கலாச்சாரத்தை பயில வந்த மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள்.
மேலும் நிகழ்ச்சியின் இறுதியில், சுவீடன் பள்ளி மாணாக்கர்கள் கூறுகயில் இந்தியா பயணத்தின்போது ஒருபகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாகவும், தமிழக காவல்துறை மீது நம்பிக்கையும், பெருமை கொள்ளும் விதமாக இருந்ததாகவும் தெரிவித்தார்கள்.