திருச்சியில் மாவட்டக் கழகச்செயலாளர்கள் கூட்டம்..! ஓ.பி.எஸ் அறிவிப்பு..!

0 368
Stalin trichy visit

சென்னை.ஏப்ரல்.08,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 10ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில்,  அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்றும்,  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என்றும், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், எங்கள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், அதற்கு முன்னதாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.

Leave A Reply

Your email address will not be published.