மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு கூட்டம்

0 347
Stalin trichy visit

 

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் விவசாய அணி மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ்,
மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட விவசாய அணி பொறுப்பாளர் பூண்டி வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட பொதுச்செயலாளர் சின்னத்துரை வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் இளங்கோவன், சரவணன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன், மாவட்ட பார்வையாளர் லோகிதாசன், விவசாய மாநிலத் துணைத் தலைவர் கோவிந்தராஜன், விவசாய அணி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், விவசாய அணி ஐடி கோட்டப் பொருப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண் பிரச்சனை சம்பந்தமாக பார்வையிட வருகை தராத தமிழக விவசாய அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்தை செயற்குழு கூட்டம் கண்டிக்கிறது.

மழைநீர் அந்தந்த பகுதியில் உள்ள ஏரி,குளங்களில் நிரப்பிட எந்த ஒரு வசதிகளும் இல்லை. அதனால் மழை நீர் காவிரி ஆற்றில் கலந்து கடலுக்கு சென்று விடுகிறது. இதை தடுக்க ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்தால் நிலத்தடி நீரின்றி மோட்டார் பாசன நிலங்கள் காய்ந்து விவசாயம் கெடுவதை தடுக்க முடியும்.
அன்பில் பகுதியில் மணல் அள்ளும் குவாரி கல்லணைக்கு பாதுகாக்கு அற்றது. மணல் அள்ளுவதை அரசு கைவிட வேண்டும்

ஒகேனக்கலில் இருந்து நாமக்கல் துறையூர் வழியாக் பெரம்பலூர் வரை செல்லும் பாசன நீர் மற்றும் குடிநீர் சட்டத்தை உடனே செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குரங்குகள், காட்டுப்பன்றிகள்,காட்டு எருமைகள், மயில்கள், மான்கள் ஆகியவற்றை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.