தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருத்தரங்கம்

0 245
Stalin trichy visit

திருச்சி, ஏப்.8 திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கு கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். மாணவர்கள் நலனில் திராவிடம் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பேசுகையில், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியில்தான் சமூக நீதியும், கல்வி வளர்ச்சியும் மேலோங்கி யது என்பதை மறுப்பதற்கில்லை. 1951ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களிடம் உரையாற்றிய கலைஞரின் பேச்சுகள் மொத்தமாக தொகுக்கப்பட்டு கல்வி நிலையங்களில் கலைஞர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகமே மாணவர்கள் நலனில் திராவிடத்தின் பங்களிப்புக்கான மிகச் சிறந்த சான்றாகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழிறிஞர் கலைஞர் ஆகிய மூவர்தான் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அடித்தளமிட்டனர். அவர்களது வழியில் ஆட்சிநடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழ்நாட்டில்தான் பிற மாநிலங்களுக்கு கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவேதான், தனியார் பள்ளிகள் மெட்ரிக் திட்டத்தை கைவிட்டு சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ திட்டங்களுக்கு மாற்றம் கண்டு முன்னுதாரணமாக வருகின்றன என்று கூறினார். ஆசிரியர் நலனில் திராவிடம் என்ற தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானா சுல்தானா பேசுகையில், கரோனா காலத்தில் மாணவர் ளைவிட ஆசிரியர்களே கடும் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிட்டது. 2 ஆண்டுகளாக கல்விக்கூடங்களுக்கே வராத மாண வர்களை தயார்படுத்தும் கடினமான இலக்கை ஆசிரியர்கள் மீது சுமத்தியது கரோனா காலம். ஆனால், ஆசிரியர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்கி ஆசிரியர்களின் நலனில் என்றும் உறுதுணையாக இருப்பது திமுக அரசு மட்டுமே என்று கூறினார்.
இக் கருத்தரங்கில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, கோவிந்தராஜ் அ.த.ந.செங்குட்டுவன் ரா.மூக்கன், மாமன்ற உறுப்பினர் வ.லீலாவேலு, கவிஞர்சல்மா செந்தில்,நூர்கான், சந்திரமோகன், பொன்.செல்லையா ,சரோஜினி, தமிழ்ச்செல்வம், பகுதி செயலாளர்கள் இ.எம்.தர்மராஜ், நீலமேகம் ராஜ்முகமது, மணிவேல்,விஜய்குமார்,பாபு,சிவகுமார்,ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், ராமசாமி, கருணாநிதி, சின்னஅடைக்கன், கங்காதரன், ராஜேந்திரன், பழனியாண்டி, நகரம் பேரூர் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் காயாம்பு மு.ம. செல்வம், நாகராஜ், தங்கவேல், சண்முகம், வீ.தனசேகரன், மணிமேகலை, கார்த்திக், ராஜேஸ்வரன், துணைமேயர் ஜி.திவ்யா ,ஜெயநிர்மலா, சத்யா, அமிர்தவள்ளி, குணசீலன், சரண்யா, கீதா ஆ.மைக்கேல்ராஜ், செல்வராஜ், மாவட்ட அணியின் அமைப்பாளர்கள் உதயகுமார், தினகரன், வேங்கடேஸ்குமார், மனோகரன், ரமேஷ், சுரேஷ்பாபு, கயல்விழி, சாந்தகுமாரி, அருள் சுந்தர்ராஜ், கிருஷ்ணகோயல், பொற்கொடி, பொகதீசன், சிவக்குமார், மணி, ஜோசப், நெல்சன், செத்தமிழ்ச்செல்வன், முகமது இலியாஸ், முத்தமிழ்கருணாநிதி, அசாருதீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். மாநகர் செயலர் மு. மதிவாணன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக பகுதி செயலர் ஆர். மோகன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.