கூர் நோக்கு இல்லங்களை கண்காணிக்க பிரத்யோக செயலி

0 263
Stalin trichy visit

திருச்சி,ஏப்.8 திருச்சி காந்திசந்தை பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், கடந்த முறையும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினேன். மீண்டும் 2 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கடந்தமுறை உறுப்பினராக இருந்தபோது, நான் இந்தியா முழுவதிலும் 237 மாவட்டங்களுக்கு சென்று கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்தேன். கடந்த மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் பொறுப்பேற்று ஆய்வை தொடங்கியுள்ளேன். கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இந்தியாவில் மொத்தம் 21இடங்களில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு 15 இடங்களில் ஆய்வுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. கூர்நோக்கு இல்லங்களில் இருந்து வரும் புகார்கள் பெரும்பாலும், போதை பொருட்கள் பயன்பாடு, ஓரினசேர்க்கை உள்ளிட்டவை தான் அதிகளவில் வருகிறது. பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
திருச்சியை பொறுத்தவரை கூர்நோக்கு இல்லம் மிகவும் தூய்மையாக, சுகாதாரமாக பராமரித்து வருகின்றனர். மாணவர்களிடம் கலந்துரையாடினோம். அவர்களும் நல்ல சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இந்தியா முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங் கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக அதற்கென ஒரு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு, அந்த செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த செயலிகளை பயன்படுத்த முடியாத இல்லங்களை நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம்.
தற்போது உள்ள கூர்நோக்கு இல்லம் இடப்பற்றாக்குறை உள்ளதால், அவற்றை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். இந்த இல்லத்தில் திருச்சி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூர்நோக்கு இல்லங்களை தாண்டி, குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். அதன்விளைவாக வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட் டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துதுறைகளையும் சேர்ந்த அதிகாரிகளை இணைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. குழந்தை களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்களை உடனடியாக விசாரிக்க திருச்சியில் குழு அமைக்கப்பட்டுள் ளது. தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் உடனடி நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங் கப்படுவதால், குற்றங்கள் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.