மனநல காப்பகங்களை ஆய்வு செய்த திருச்சி மாவட்ட ஆட்சியர்..!
ஏப்ரல்.11, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் வேலா மனநல காப்பகம் மற்றும் சங்கராலயா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இடைநில்லா காப்பகம் மற்றும் 14- வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் குறையுடையோருக்கான விடுதி வசதி மற்றும் தொழிற்பயிற்சியுடன் கூடிய பெண்களுக்கான இல்லத்தை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப. இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமா.இ.கா.ப., இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.வைத்தியநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சீ.சந்திரமோகன் ஆகியோர் உள்ளனர்.