குண்டர் சட்டத்தில் கைதான கஞ்சா விற்றவர்…! மாநகர காவல் ஆணையர் எம். சத்திய பிரியா ஐபிஎஸ் அதிரடி..!
திருச்சி.ஏப்ரல்.12, திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக 8 வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகா காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
கடந்த 22 ஆம் தேதி ராம்ஜிநகர் மில்காலனி, மாரியம்மன்கோவில் பின்புறம் இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா சுமார் 2 கிலோ 450 கிராமை கைப்பையில் வைத்து விற்பனை செய்த ராம்ஜிநகர் மில்காலனியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகனான எதிரி ஜெய் (எ) ஜானகிராமன் என்பவரை பிடித்து விசாரனை செய்தும், எதிரியிடமிருந்து சுமார் 2கிலோ450கிராம் கஞ்சாவை கைப்பற்றி, உடனடியாக எதிரியை கைது செய்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ப்பட்டு, எதிரி ஜெய் (எ) ஜானகிராமனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் எதிரி ஜெய் (ஏ) ஜானகிராமன் மீது திருச்சி மாநகரத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 வழக்குகள் உட்பட மொத்தம் 10 வழக்குகள் திருச்சி மாநார் மற்றும் மாவட்ட காவல் நிவைங்களில் நிறுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, எதிரி ஜெய் (எ) ஜானகிராமன் தொடர்ந்து இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் எண்ணம் உடையவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எடமயைப்பட்டிபுதூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.எம்.சத்திய பிரியா, இ.கா.ப. மேற்படி எதிரியை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீறு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.