பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற 2பேர் கைது

0 322
Stalin trichy visit

திருச்சி, ஏப். 12 திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம், கடந்த 08.04.23- ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு TN 30 BF 8690(திண்டுக்கல் மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனம்) என்ற இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பெண் ஊழியர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்றபோது, பெண் தடுத்ததால், சங்கிலியை பறிக்க முடியாமல்போக, சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஓடிவரவும், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு சங்கிலி பறிப்பு திருடர்கள் தப்பி ஓடிவிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
தனிப்படையினரின் துரித விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கைளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10.04.23- ஆம் தேதி காவல் ரோந்தின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடத்து சென்ற இரண்டு நபர்களை நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தபோது, விசாரணையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த் 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள மாரிமுத்து விஜய் (21) மற்றும் 3 வழிப்பறி வழக்குகளும் 1 திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ள 2.சங்கர் (23) ஆகியோர்கள் மேற்படி வழிப்பறி முயற்சி சம்பவத்தில் ஈடுப்பட்டதை தனிப்படையினர் உறுதி செய்தனர். உடனடியாக எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரிகளை கைது செய்த அதிகாரிகள், தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.