அடுத்தடுத்து குண்டாஸ்..! அதிரடி காட்டும் ஐபிஎஸ்…! அமைதியாகும் திருச்சி..?
மளிகை கடை நடத்தி வரும் பெண்களைத் தாக்கியும், ஆபாச வார்த்தையால் திட்டியும், மிரட்டல் விடுத்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், பெண்களுக்கெதிரான குற்றச்செயள்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள், வழங்கியுள்ளார்கள்.

அதன்படி, கடந்த 20ஆம் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நேருஜி நகர் அருகில், மளிகைக்கடை நடத்தி வரும் பெண் ஒருவரை தாக்கியும், ஆபாச வார்த்தையால் திட்டியம், மிரட்டல் விடுத்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சலீம் பாட்ஷா என்பவரின் மகனான ரவுடி குலாம் தஸ்தகீர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரவுடி குலாம் தஸ்தகிர் மீது கத்தியை காட்டி மிரட்டி பாம் பறித்ததாக 4 வழக்குகளும், பணம் வைத்து சூதாடியதாக ஒரு வழக்கும் உட்பட மொத்தம் 13 வழக்குகள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும், ரவுடி குலாம் தஸ்தகிர் பொது இடங்களில் குற்றங்கள் செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எண்ணம் கொண்டவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி ரவுடியினர் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, இ.ஆ.ப, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று பெண்களுக்கெதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்ளை விடுக்கப்பட்டுள்ளது.