மணப்பாறை அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவிக்காரபட்டியில் ஆவிக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு குளம் முழுதுமாக நிரம்பியது. கோடை காலம் துவங்கிவிட்டதால் குளத்தில் நீரின் அளவு வெகுவாக குறைய ஆரம்பித்து தற்போது குளத்தில் குறைந்து அளவே நீர் உள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அதன்படி இன்று ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் துவங்கினர். விரால், கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் சிக்கியது.
மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானார் கலந்து கொண்டனர்.