பணியில் உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவு அஞ்சலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீத்தொண்டு வார விழா நடைபெறும். அதன்படி இன்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் தீத்தொண்டு வார விழா தொடங்கியது. இன்று முதல் வருகின்ற 20 ம் தேதி வரை தீத்தொண்டு வார விழா நடைபெறும். இந்நிலையில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு புள்ளம்பாடி தீயணைப்பு பொறுப்பு நிலைய அலுவலர் பாரதிய தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சிவகுமார், சிறப்பு நிலைய போக்குவரத்து அமுதகுமார்,யாதாவோ திராவிடன், வீரர்கள் ரமேஷ் குமார், அசாருதீன், கனகராஜ், அருண்ராஜ்,லோகநாதன், மோகன், பிரகாஷ்,நவீன் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர் இதனை தொடர்ந்து இன்று முதல் வருகின்ற 20-ஆம் தேதி வரை தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு புள்ளம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.