புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..! கொடியேற்றி இனிப்பு வழங்கினார் மாமன்றஉறுப்பினர் ந. செந்தில்..!
திருச்சி. ஏப்ரல்.14, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அவரது 133-வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்களின் அழைப்பினை ஏற்று கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வை ராஜேஷ் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நிர்வாகிகளும் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்தனர், மலையப்ப நகர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.