பி.கே.அகரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்.

0 344
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி.கே.அகரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாரியம்மனுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்.

பி.கே.அகரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் கோவில். இந்த கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும், செல்வம் செழிக்கவும், குடும்பம் விருத்தி அடையவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி இந்த கிராமத்தில் உள்ள பக்தர்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு வருடமும் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா காலத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மனை வணங்கி மாலை அணிந்து, விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி பி.கே.அகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கிராமத்தில் உள்ள பக்தர்கள் அழகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் கிராம பொதுமக்கள் பக்தர்கள் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.